தொழில்நுட்பக் கோளாறு நீங்கி மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது FB, வாட்ஸ் ஆப்!

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 12 மணி நேரத்திற்குப் பின் சரிசெய்யப்பட்டது!!

Last Updated : Jul 4, 2019, 08:12 AM IST
தொழில்நுட்பக் கோளாறு நீங்கி மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது FB, வாட்ஸ் ஆப்! title=

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 12 மணி நேரத்திற்குப் பின் சரிசெய்யப்பட்டது!!

பிரபல சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூன்றும் சில மணிநேரங்களாகச் சரியாக வேலைசெய்யவில்லை என உலகமெங்கும் இருந்து புகார்கள் எழுந்தன. மூன்றுமே தற்போது பேஸ்புக்கிற்குச் சொந்தமான சேவைகள் தான். 

உலகம் முழுவதும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்களை பதிவிறக்கம் செய்யவோ, அனுப்பவோ முடியவில்லை என்று பல்லாயிரக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இப்பிரச்சினை பெரும்பாலும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினையை சரிசெய்து இயல்பு நிலைக்கு திரும்ப முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். கடந்த மார்ச் மாதத்தில் இதுபோன்றதொரு பிரச்சினையை பேஸ்புக் சந்தித்தபோது 24 மணி நேரத்திற்கு பேஸ் புக் சேவைகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஃபேஸ்புக் தங்களது அதிகாரபூர்வப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ``சிலர் எங்கள் ஆப்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்யமுடியாமல் இருப்பது பற்றி நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கலுக்கு அவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம். முடிந்தளவு சீக்கிரம் இந்தப் பிரச்னையை சரிசெய்வோம்" என்று அதில் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமின் ட்விட்டர் பக்கத்திலும் இதே அறிக்கை பதிவிடப்பட்டது.

இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இது ஹேக்கர்களின் வேலையா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகள் இந்தப் பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்பட்ட பின்னே கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இன்று அதிகாலை நேரத்தில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழையபடி ஃபேஸ்புக் சேவைகளை வழங்கி வருகிறது. இதேபோல் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழையபடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

 

Trending News