அமர்நாத்துக்கு யாத்திரை சென்ற பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியாயினர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த பஸ் , பகல்ஹாம் அருகே ஒரு இடத்தில் பள்ளத்தாக்கில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16 பேர் பலியாயினர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். சம்பவ இடத்தில் பக்தர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
பிரதமர் மோடி இரங்கல்:
அமர்நாத் சாலை விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்:-
"அமர்நாத் யாத்ரீகர்கள் விபத்தில் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.