Electoral bonds: அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் நாளை மார்ச் 12-ஆம் தேதி வணிக நேரம் முடிவதற்குள் அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. “எஸ்பிஐ தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதை வைத்து பார்த்தல் இந்த தகவல்கள் உடனடியாக கிடைக்க கூடியது தான் என்று தெரிகிறது. எனவே, ஜூன் 30 வரை கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்பிஐயின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள்
பாரத ஸ்டேட் வங்கியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “நாங்கள் அனைத்து தகவல்களை ஒன்றாக எடுக்க முயற்சித்து வருகிறோம். தற்போது இந்த முழு செயல்முறையையும் மாற்றியமைக்க வேண்டும். ஒரு வங்கியாக இது ஒரு ரகசியமாக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “சீல் செய்யப்பட்ட கவரைத் திறந்து அனைத்து விவரங்களையும் எடுங்கள். பிறகு சீலிடப்பட்ட கவரில் விவரங்களை தாக்கல் செய்யுங்கள்" என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு “கடந்த 26 நாட்களில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதில் உங்கள் விண்ணப்பம் அமைதியாக உள்ளது” என்று குறிப்பிட்டது.
BREAKING
— Live Law (@LiveLawIndia) March 11, 2024
கடந்த பிப்ரவரி 15 அன்று, உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் நிதியுதவியை அனுமதித்த மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்தது. மேலும், இந்த பத்திரங்கள் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் கூறியது. மேலும் அரசியல் கட்சிகளுக்கு யார் யார் நன்கொடை அளித்துள்ளனர்? அவர்கள் நன்கொடை அளித்த தொகை எவ்வளவு? தேர்தல் பத்திரம் யார் பெயரில் வாங்கப்பட்டது ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவைப் படிக்கும் போது தலைமை நீதிபதி கூறியதாவது, “தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் 7(4)வது ஷரத்து, தேர்தல் பத்திரத்தை வாங்குபவர் அளிக்கும் தகவல்கள் குறிப்பிட்ட வங்கியால் ரகசியமாகக் கருதப்படும் என்றும், அவை தேவையான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடுகிறது. எனவே, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின்படி, எஸ்பிஐ தேவைப்படும்போது தகவல்களை வெளியிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ