புத்தாண்டை பண்டிகையொட்டி சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சமையல் எரிவாயு விலை சரிவை தொடர்ந்து, மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது!
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படுகிறது. அதேப்போல் சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் இம்மாதத்தின் முதல் நாள் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எண்ணெய் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ₹ 482.88 எனவும், மானியம் இல்லா சிலிண்டர் ₹ 704.50 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட விலையை விட இது ₹ 120.50 (மானியம் இல்லா சிலிண்டர்), ₹5.91 (மானிய சிலிண்டர்) குறைவு ஆகும். அந்த விலை குறைப்பு ஜனவரி 1-ஆம் நாள் முதல் அமுலுக்கு வருகிறது.
அதேவேலையில் டெல்லியில் முன்னாதக ₹500.90 -ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை, ₹494.99 என குறைந்துள்ளது. மானியமில்லா சிலிண்டர் விலை ₹809.50 என இருந்த நிலையில் தற்போது ₹689 -ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைந்ததும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவாக உள்ளதாலும், சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.