Aam Aadmi Party Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) மூன்று முறை சம்மன் அனுப்பிய பிறகும், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவருமான அரவிந்த்கெஜ்ரிவால் விசாரணை நிறுவனம் முன் ஆஜராகவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் சில முக்கியத் தலைவர்கள் நேற்றே எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள கூடாது என்பதற்காகவே சம்மன் அனுப்பப்படுகிறது. என்னை கைது செய்ய பாஜக விரும்புகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தியா முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது,
ஊழல் நடந்திருந்தால், அந்த பணம் எங்கே?
மதுபான ஊழல்... கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வார்த்தையை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் அதுக்குறித்து விசாரணை நடத்தியும் ஒரு பைசா கூட எங்கும் கிடைக்கவில்லை.
மோசடி நடந்திருந்தால், பணம் எங்கே போனது? பணம் காற்றில் காணாமல் போனதா? ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக பொய் வழக்குகள் போட்டு கைது செய்ய முயற்சி
இப்போது பாஜக பொய் வழக்குகள் போட்டு என்னை கைது செய்ய நினைக்கிறது. எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
விசாரணை அல்ல, கைது செய்வதே நோக்கம்:
லோக்சபா தேர்தலுக்கு முன், தனக்கு ஏன் சம்மன் அனுப்பப்பட்டது என கேள்வி எழுப்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'விசாரணை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் விசாரணை அழைப்பு விடுவது ஏன்?
ED समन पर मेरी प्रेस वार्ता। https://t.co/NB9Lty67jL
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2024
இந்த விசாரணை சம்பந்தமாக 8 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. அமைப்பிடம் பதில் சொல்லி விட்டேன். இப்போது லோக்சபா தேர்தலுக்கு முன் அழைக்கப்படுவதால், என்னை விசாரிப்பது அவரது நோக்கம் அல்ல.
அவர்கள் என்னை அழைத்து கைது செய்ய விரும்புகிறார்கள். அதனால் என்னால் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாது.
பாஜகவில் சேர மறுத்ததால் சிறை
இன்று பாஜக தனது கட்சியில் தலைவர்களை சேர்க்க அமலாக்கத்துறை (Enforcement Directorate) மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation) பயன்படுத்துகிறது. மணிஷ் சிசோடியாவும், சஞ்சய் சிங்கும் ஊழல் செய்ததால் சிறையில் இல்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். மாறாக, பாஜகவில் சேர மறுத்ததால் சிறையில் உள்ளார். எது நடந்தாலும் அது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றார்.
அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 சம்மன்களை அனுப்பியுள்ளது. அதில் அவர் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். ஆனால் மூன்று சம்மன்களையும் பெற்ற பிறகும், கெஜ்ரிவால் இதுவரை அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. மூன்று சம்மன்களுக்கும் பதில் கடிதங்களை அனுப்புவதன் மூலம் அமலாக்கத்துறைக்கு அவர் பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க - ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
விசாரணை சாக்கில் அழைத்து கைது செய்ய ED முயற்சி
அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியதை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது.
விசாரணை என்ற சாக்கில் அவரை அழைத்து கைது செய்ய அமலாக்கத்துறை விரும்புகிறது. அமலாக்கத்துறை விசாரிக்க விரும்பினால், அதன் கேள்விகளை எழுதி கேஜ்ரிவாலிடம் கொடுக்கலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ஆம் ஆத்மி தலைவர்கள் அச்சம்
புதன்கிழமையிலிருந்தே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் என்றும், அவரை கைது செய்யலாம் என்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாழ் கைது செய்யப்படலாம்?
டெல்லி அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் மற்றும் ராஜ்யசபா எம்பி சந்தீப் பதக் ஆகியோர் சமூக ஊடக தளமான X இல் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை, இன்று சோதனை செய்யலாம் என்றும், அதன் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்றும் பதிவிட்டு இருந்தனர்.
மேலும் படிக்க - கைதான 2 அமைச்சர்களும் ராஜினாமா... நெருக்கடியில் ஆம் ஆத்மி அரசு - இனி என்னவாகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ