ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்..!

திறமையற்ற ஊழியர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..!

Last Updated : Sep 1, 2020, 08:13 AM IST
ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்..! title=

திறமையற்ற ஊழியர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..!

ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுவாக ஊழலில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு, துறை ரீதியிலான நடவடிக்கை, பணியிடமாற்றம் போன்றவைகளே நடைமுறையில் உள்ளன. ஆனால் இவற்றால் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்பது பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "அடிப்படை விதிகள் மற்றும் 1972 ஆம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிகள், ஒரு மத்திய அரசு ஊழியரின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கும், தேவைப்பட்டால் பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கும் அதிகாரம் அளிக்கிறது.

ALSO READ | நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தினம் காலையில் இதை மட்டும் பின்பற்றவும்..!

ஆகவே, ஒவ்வொரு அரசு ஊழியரின் பணி பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். ஒரு ஊழியர் 50 அல்லது 55 வயதை எட்டி விட்டாலோ அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை பூர்த்தி செய்து விட்டாலோ அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்ய வேண்டும். அவர் செயல்திறமையற்றவராகவோ அல்லது ஊழல்வாதியாகவோ இருந்தால், பொதுநலன் கருதி, அவரை முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டும். இது தண்டனை அல்ல. 1965 ஆம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளில் கூறப்பட்டுள்ள கட்டாய ஓய்வு முறையே தண்டனை ஆகும். அதில் இருந்து இது மாறுபட்டது.

முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டிய அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்கள் முன்கூட்டியே நோட்டீஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அல்லது நோட்டீசுக்கு பதிலாக, 3 மாத சம்பளம் மற்றும் படிகளை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு. ஆய்வை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அவர்களை ஓய்வுபெற செய்ய வேண்டும். எந்த ஊழியரின் செயல்திறனாவது திடீரென குறைந்துவிட்டால், அவரின் பணி பதிவேட்டையும் ஆய்வு செய்து ஓய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளது. 

Trending News