NMC மசோதாவுக்கு எதிராக மருத்துவர்கள் 24 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்தம்

மருத்துவர்கள் இன்று NMC மசோதாவுக்கு எதிராக 24 மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு!!

Last Updated : Jul 31, 2019, 07:40 AM IST
NMC மசோதாவுக்கு எதிராக மருத்துவர்கள் 24 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்தம் title=

மருத்துவர்கள் இன்று NMC மசோதாவுக்கு எதிராக 24 மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு!!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் புதன்கிழமை (இன்று) காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுள்ளனர். இந்நிலையில், அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளையும் திரும்பப் பெற்றனர். இருப்பினும், அவசரநிலை, விபத்து, தீவிர சிகிச்சை பிரிவு (ICU) மற்றும் தொடர்புடைய சேவைகள் பொதுவாக செயல்படும். 
மக்களவையில் 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மசோதா நிறைவேற்றப்படுவதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிரான பொது ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும். சில மருத்துவர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று IMA தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் கடும் எதிர்ப்பை மீறி தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நேற்று நிறைவேற்றியது. ஜனநாயக விரோத தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 க்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் ஜனநாயக கீழ் சபை இந்த நாட்டின் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வியை இருளில் ஆழ்த்தியுள்ளது. IMA தலைமையகம் 31.07.2019 புதன்கிழமை அத்தியாவசியமற்ற சேவைகளை 24 மணி நேரம் திரும்பப் பெறுமாறு இணையதளம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

அவசர நடவடிக்கைக் குழு நேற்று இரவு நிலைமையை ஆய்வு செய்தது. 31.07.2019 புதன்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது நவீன மருத்துவ மருத்துவர்கள் நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற சேவைகளை 24 மணி நேரம் திரும்பப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 01.08.2019 வியாழக்கிழமை, ”என்று IMA தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் வகுப்புகளை புறக்கணிக்கும்படி இந்திய மருத்துவர்கள் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளனர்.

 

Trending News