அசத்தல் தீபாவளி பரிசு- கார், பிளாட் அள்ளி கொடுத்த சூரத் வியாபாரி!!

சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி டோலாகியா ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

Last Updated : Oct 28, 2016, 11:29 AM IST
அசத்தல் தீபாவளி பரிசு- கார், பிளாட் அள்ளி கொடுத்த சூரத் வியாபாரி!! title=

சூரத்: சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி டோலாகியா ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

கடந்த வருடம் தீபாவளியின்போது, தனது ஊழியர்கள் 491 கார்களும், 200 பிளாட்டுகளும் வழங்கினார். இதன்மூலம் தேசிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

இந்த வருடம் அவர் தன் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போனசாக கொடுக்க முடிவு செய்தார். இந்த பரிசுகளைப் பெற 1,716 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கலுக்கு 400 பிளாட்டுகளும், 1260 கார்களும் தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் சவ்ஜி டோலாகியா.

சவ்ஜி டோலாகியா அறிவித்துள்ள பரிசுகளின் மதிப்பு 5௦ கோடி ரூபாய். இருப்பினும் ஊழியர்கள் மகிழ்ச்சியே தனக்கு திருப்தி என்கிறார் சவ்ஜி டோலாகியா.

Trending News