RBI Monetary Policy:வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம், விகிதங்களில் இல்லை மாற்றம்

வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியிருப்பவர்கள் தற்போது கட்டும் அளவிலேயே கடன்களுக்கான இஎம்ஐகளைத் தொடர வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2021, 11:18 AM IST
RBI Monetary Policy:வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம், விகிதங்களில் இல்லை மாற்றம் title=

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி புதன் கிழமை (இன்று) தனது நாணயக் கொள்கை மதிப்பாய்வின் அறிக்கையை வெளியிட்டது. இந்த நாணயக் கொள்கை மதிப்பாய்வில், ஆர்.பி.ஐ. முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியிருப்பவர்கள் தற்போது கட்டும் அளவிலேயே கடன்களுக்கான இஎம்ஐகளைத் தொடர வேண்டும். விகிதங்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இது ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தனது நாணயக் கொள்கை விகிதங்களின் முடிவுகளை அறிவிக்கும் மத்திய வங்கி, ரெப்போ விகிதத்தை (Repo Rate) 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 3.35 சதவீதமாகவும் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது.

வணிக வங்கிகளுக்கு தேவைபப்டும்போது ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடன் அளிக்கும். அந்த கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம்தான் ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படுகின்றது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவியாகும் இது. ரிவர்ஸ் ரெப்போ வீதம் (Reverse Repo Rate) என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் வீதமாகும்.

ALSO READ | Fake Note Alert: உங்ககிட்ட இந்த ரூ. 500 நோட்டு இருக்கா? முக்கிய தகவலை அளித்தது அரசு!! 

MPC தனது கடைசி எட்டு மதிப்பாய்வுகளில் முக்கிய பெஞ்ச்மார்க் விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. இப்போது, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பாலிசி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க MPC முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி தனது கொள்கை விகிதத்தை கடைசியாக மே 22, 2020 அன்று, ஒரு ஆஃப் பாலிசி சுழற்சியில் மாற்றியது. அப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன.

6 உறுப்பினர்களைக் கொண்ட MPC-யில், வட்டி விகிதத்தை (Interest Rate) மாற்றாமல் வைத்திருப்பதற்கு ஏகமனதாக வாக்களிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சியை ஆதரிக்கவும், பணவீக்கத்தை இலக்குக்குள் வைத்திருக்கவும் தேவைப்படும் வரை அதன் இணக்கமான நிலைப்பாட்டை தொடர முடிவு செய்யப்பட்டது.

ALSO READ| Pensioners: ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News