இன்று முதல் மீண்டும் உயர்ந்தது மெட்ரோ ரயில் கட்டணம்

Last Updated : Oct 10, 2017, 09:54 AM IST
இன்று முதல் மீண்டும் உயர்ந்தது மெட்ரோ ரயில் கட்டணம் title=

டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் மெட்ரோ ரயில் விலை நிர்ணய குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News