'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்... ஆனால்' - நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டீஷன்

டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இரண்டு ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல சுத்தமான பர்கர்களை வழங்க அவருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 5, 2022, 07:20 PM IST
  • அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் திருமணமாகி, விவகாரத்தானவர்கள்.
  • இருவரும் சமாதானமாக போனதால், பாலியல் வன்புணர்வு என தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய இருதரப்பும் வாதம்.
  • நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால், நிபந்தனைகள் விதித்து நீதிபதி உத்தரவு
'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்... ஆனால்' - நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டீஷன் title=

முன்னாள் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தது, சட்ட விரோதமாக பின்தொடர்ந்தது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்ளுக்காக டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜஸ்மீட் சிங் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், அந்த குற்றஞ்சாட்டப்பட்டவரும், வழக்கு தொடர்ந்து பெண்ணும், கணவன்-மனைவி என்றும் பின்னர்,  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கை அவர் திருமண தகராறால் விளைந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும், முன்னதாகவே, இந்த தங்களின் முழு மனதோடு இந்த பிரச்சனையில் சமாதானமாக போவதாக இரு தரப்பும் அறிவித்தது. மேலும், அந்த வழக்கை ரத்து செய்ய தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த முன்னாள் மனைவியும் உறுதியளித்தார். 

மேலும் படிக்க | ராம்லீலா விழாவில் ஆபாச நடனம்... பொங்கி எழுந்த உத்தரப் பிரதேச போலீஸ்!

இதனால், இந்த வழக்கை ரத்து செய்தது மட்டுமின்றி, தீர்ப்பில் சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார். அதாவது,'இந்த வழக்கு 2020ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு, நீதிமன்றத்தின் நேரத்தையும், போலீசாரின் நேரத்தையும் வீணடித்துள்ளது. இந்த நேரத்தை உபயோகமான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். அதனால், மனுதாரர் சமுதாயத்திற்கு உதவும் வகையில் எதாவது நல்லது செய்ய வேண்டும்" என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

எனவே, டெல்லியின் நொய்டாவில் இரண்டு பர்கர் கடை வைத்து நடத்திவரும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், இரண்டு ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு (குறைந்தபட்சம் 100 பேருக்கு) நல்ல சுத்தமான இடத்தில் வைத்து தயாரான பர்கர்களை வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் முன்னாள் மனைவிக்கு ரூ. 4.5 லட்சத்தையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

 மேலும் படிக்க | PFI உடன் 873 கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா... உண்மை என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News