நாராயணா தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 23 தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்!
டெல்லி: வியாழக்கிழமை அதிகாலையில் தேசிய தலைநகரான டெல்லி நாராயணவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்கு இந்த சம்பவன் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மொத்தம் 23 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நாராயணா இன்டஸ்ட்ரீட் ஏரியா, கட்டம் I இல் ஒரு காகித அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் 7.17 மணியளவில் தீயைத் தெரிவித்தனர். இந்த தீ விபத்து மற்றும் பல மேல் மாடிகளுக்கு பரவியுள்ளது.
#WATCH A medium category fire broke out at a paper card factory in Naraina Industrial Area, Phase I, early morning today; Total 23 fire tenders engaged in fire fighting operations, no casualties reported pic.twitter.com/l6wiOjfELO
— ANI (@ANI) February 14, 2019
மேலும், ஆலைக்குள் யாராவது உள்ளார்களா என்பது குறித்து பரிசோதித்து வருகின்றனர். இந்த தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதன் காரணமும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்த விவரங்களுக்கு காத்திருக்கவும்... கடந்த ஐந்து நாட்களில் இது மூன்றாவது சம்பவமாகும்.