GTB மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து மருத்துவர் தற்கொலை..

ஜிடிபி மருத்துவமனையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவர் தற்கொலை!!

Last Updated : Sep 1, 2019, 02:19 PM IST
GTB மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து மருத்துவர் தற்கொலை.. title=

ஜிடிபி மருத்துவமனையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவர் தற்கொலை!!

டெல்லி: GTB மருத்துவமனையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். குரு தேக் பகதூர் மருத்துவமனை வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து சனிக்கிழமை குதித்து 44 வயது நபர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இறந்தவர் அசாமைச் சேர்ந்த பல்லவ் எனவும் இவர் மருத்துவராக பணியாற்றிவருவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்; இறந்தவர் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்ததாக காவல் அதிகாரி தெரிவித்தனர். முதன்மையாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறது; இருப்பினும், இறந்தவரிடமிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News