பங்குச்சந்தை மோசடி...ஆனந்த் சுப்ரமணியன் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Mar 24, 2022, 05:27 PM IST
  • தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கு
  • ஆனந்த் சுப்ரமணியத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி
  • குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என நீதிமன்றம் கருத்து
பங்குச்சந்தை மோசடி...ஆனந்த் சுப்ரமணியன் ஜாமீன் மனு தள்ளுபடி title=

தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணன் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், விதிமுறைகளை மீறி ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை செயற்குழு அதிகாரியாக நியமித்ததாகவும், பங்குச்சந்தை விவரங்களை கசியவிட்டதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சித்ரா ராமகிருஷ்ணனையும், ஆனந்த் சுப்ரமணியனையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

மேலும் படிக்க | என்எஸ்இ மோசடி வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிஷ்ணா கைது, விவரங்கள் இதோ

மேலும் பங்குச்சந்தை விவரங்களை இயமலை சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆனந்த் சுப்ரமணியனே இமயமலை சாமியார் என்ற பெயரில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஆலோசனைகளை வழங்கியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆனந்த் சுப்ரமனியனின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஆனந்த் சுப்ரமணியன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை எனவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதாகவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. ஆனந்த் சுப்ரமணியனின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.15 லட்சமாக இருந்த நிலையில் எதன் அடிப்படையில் அவருக்கு ரூ.4 கோடி அளவுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  ஆனந்த் சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால் இப்போதைய நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த காரணமும் இல்லை எனக் கருத்து தெரிவித்த நீதிமன்றம், ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.   

மேலும் படிக்க | ஆனந்த் சுப்பிரமணியன் கைது: மிகப்பெரிய என்எஸ்இ மோசடியில் சிக்கிய இவர் யார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News