புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி பிரிவு, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளது
டெல்லி பாஜகவின் ஐடி செல் தலைவர் (சமூக ஊடகங்கள்) அபிஷேக் துபே, தேசிய தலைநகரில் விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்க கெஜ்ரிவால் முயற்சிப்பதாகவும், கலவரத்தைத் தூண்ட சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
“அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் நகரத்தில் கலவரத்தைத் தூண்டவும் சதி செய்கிறார். டிசம்பர் 17 அன்று டெல்லி சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டினார். அதில் வேளாண் சட்டம் குறித்த விவாதத்தின் போது, அவர் அரசியலமைப்பை மீறி, மத்திய அரசின் பண்ணை சட்டங்களின் நகல்களைக் கிழித்தார். இது விவசாயிகளை தூண்டி விட்டு, கலவரத்தைத் தூண்டும் முயற்சி, ”என்று துபே தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
ALSO READ | தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பச்சோந்தி: மீனாட்சி லேகி
இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறையினர் தலையிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யுமாறு கோரிய அவர், “டெல்லியின் நிலைமை மோசமடைந்தால், கெஜ்ரிவால் பொறுப்பேற்க வேண்டும், அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
நேற்று டெல்லி (Delhi) சட்டமன்றத்தின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களின் நகல்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்து எறிந்தார்.
பிரதிகளை கிழித்த அரவிந்த் கெஜ்ரிவால், “இவ்வாறு செய்வது எனக்கு வேதனையாக உள்ளது. தில்லியில் தட்பநிலை வெறும் 2 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலையில் தெருக்களில் தூங்கிக் கொண்டிருக்கும் எனது நாட்டின் விவசாயிகளை என்னால் ஏமாற்ற முடியாது. ” என்றார்.
தில்லி சட்டமன்றத்தில் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு (Farm Laws) எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இது வரை போராட்டத்தில் ஈடுபட்ட, 20 விவசாயிகள் இதுவரை இறந்துவிட்டதாக கூறிய அவர், எதிர்ப்பு தெரிவித்து முகாமிட்டுள்ள விவசாயிகள், தாங்களாகவே தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இருக்கக்கூடாது என்றார்.
ALSO READ | விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR