Covishield, Covaxin: ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா திரிபுகளுக்கு எதிராக செயல்படும்

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் SARS-CoV-2 வைரஸின்  ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என அனைத்து வகை திரிபுகளுக்கும் எதிராக செயல்படுகின்றன என மத்திய அரசு கூறியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 27, 2021, 03:35 PM IST
  • இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று 12 மாநிலங்களில் 51 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
  • தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இது வரை நாடு முழுவதும் 31 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Covishield, Covaxin: ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா திரிபுகளுக்கு எதிராக செயல்படும் title=

Covishield, Covaxin: புதிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வகை பீதியை கிளப்பி வரும் நிலையில், கோவிட் -19 தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் SARS-CoV-2  வைரஸின் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவுக்கு எதிராக செயல்படுகின்றன மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 

மேலும், டெல்டா பிளஸுக்கு (Delta Plus) எதிரான செயல்திறன் தொடர்பான பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஏழு முதல் பத்து நாட்களில் இது குறித்த முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக ICMR தலைமை இயக்குநர் பார்கவா கூறினார்.

இந்தியாவில் (India) தற்போது வழங்கப்பட்டு வரும் கோவேக்ஸின் கோவிஷீல்ட் ஆகிய  இரண்டு தடுப்பூசிகளும் புதிய டெல்டா திரிபுக்கு எதிராக செயல்படுகிறது என்று ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர்  கூறினார். "கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா ஆகிய வகைகளுக்கு எதிராக செயல்படுகின்றன " என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் கூறினார்." என்று பார்கவா மேற்கோளிட்டுள்ளார்.

ALSO READ | நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று 12 மாநிலங்களில் 51 பேருக்கு ஏற்பட்டுள்ளது. B.1.617.2 பிளஸ் அல்லது டெல்டா பிளஸ் வகை கொரோனா திரிபு, அதன் பரவக்கூடிய தன்மை, நுரையீரல் உயிரணுக்களை பாதிக்கும் தன்மை  ஆகிய தன்மைகளின் காரணமாக கவலைகுரிய வகை கொரோனா தொற்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது வரை நாடு முழுவதும் 31 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 26 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது.  5.49 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளது

ALSO READ: Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News