கொரோனா தொற்று (Corona Virus) உலகை பாடாய் படுத்தி வருகிறது. இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டுள்ள இந்த தொற்றுநோயின் வீரியம் சற்று குறைவதாகத் தோன்றினாலும், சமீபத்தில் இது உலகின் பல இடங்களில் முழு உத்வேகத்துடன் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இது கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் (Second wave) அறிகுறியாக இருக்கலாம் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள பண்டிகை காலங்களில் மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில், இந்த நடமாட்டம் இரண்டாவது அலைக்கு பெரும் காரணியாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை காலத்திற்குப் பிறகு COVID நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலைக்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே என்று வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையின் பிரபல வைராலஜிஸ்ட்டும் முன்னாள் வைராலஜி துறையின் தலைவருமான டாக்டர் டி ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் ஒரு சிறிய அளவு அதிகரிப்பே இருக்கும் என்றும், இதன் விளைவாக இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு 50,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகலாம் என்றும் அவர் கூறினார்.
ALSO READ:நாடு முழுவதும் நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு... எதற்கெல்லாம் அனுமதி?
அவரைப் பொறுத்தவரை, தொற்றுநோயின் உண்மையான அளவு ஒருபோதும் அறியப்படாமல் போகலாம். ஏனெனில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்புத் தடமறிதல், அறிகுறியைக் காட்டும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் தொடர்புகள், குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கைவிடப்பட்டது. ஏனென்றால், அறிகுறி பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, தொடர்பு தடமறிதலுக்கு பதிலாக, முக்கியத்துவம் சிகிச்சைக்கு மாற்றப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது கூட, COVID அறிகுறிகளைக் காட்டியவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
அவரது பார்வையில், தொற்றுநோய் என்ணிக்கை செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் உயர்ந்தது. ICMR-ன் இரண்டாவது செரோ-கணக்கெடுப்பு, சிகிச்சை அளிக்கப்பட்ட 7 மில்லியன் நோயாளிகளின் அடிப்படை புள்ளிவிவரத்துடன் கணக்கிடப்பட்டது. இது 26 ஆல் பெருக்கப்பட்டு அறிகுறி கொண்ட நோயாளிகளின் அளவு கணக்கிடப்பட்டது.
ஆனால் மக்களின் ஒரு பெரிய பகுதி அறிகுறியற்றதாக இருந்திருக்கலாம் என்று கருதினால், 7 மில்லியனை 50 ஆல் பெருக்க வேண்டும் என்ற விகிதத்தில் நாம் கணக்கிட வேண்டும். இதுதான் சற்று யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும் என்றும் டாக்டர் டி ஜேக்கப் ஜான் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000 க்கும் குறைவாகக் குறைந்து வருவதால், இந்த வீழ்ச்சி தொடர்வதை உறுதிசெய்ய முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பு கிருமி நாசினிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தனி நபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR