Corona Virus சிகிச்சைக்கான Insurance Claim-ல் கிடைக்கும் தொகையின் அளவு என்ன தெரியுமா

இதுவரை, காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த கிளெய்ம்களில் 74% கிளெய்ம்களுக்கான தொகையை வழங்கியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2020, 01:26 PM IST
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,66,705 ஐ எட்டியுள்ளது.
  • மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்றின் அளவு அதிகரிக்கின்றது.
  • இதுவரை காப்பீட்டு நிறுவனங்களிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான கிளெய்ம்கள் வந்துள்ளன.
Corona Virus சிகிச்சைக்கான Insurance Claim-ல் கிடைக்கும் தொகையின் அளவு என்ன தெரியுமா  title=

நவம்பர் 25 ஆம் தேதி வரையிலான காப்பீட்டு நிறுவனங்களின் தரவுகளின்படி, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் சராசரி செலவு 1.50 லட்சமாக இருந்துள்ளது. இதில், 62 சதவீத செலவு அதாவது 93,000 ரூபாய், காப்பீட்டு கிளெய்மின் வடிவில் செலுத்தப்பட்டுள்ளது.  

இதுவரை காப்பீட்டு நிறுவனங்களிடம் (Insurance Companies) 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான உரிமைகோரல்கள் வந்துள்ளன. இதில் காப்பீட்டு நிறுவனங்கள் 4200 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.

மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான கோரல்கள் (Health Insurance Claim)

மொத்த காப்பீட்டு கோரலில் (Insurance Claim) மிகவும் அதிகபட்சமாக, 38% மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளது. 9.93 சதவீத கொரல்களுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், குஜராத் 9.87 சதவீத கோரலுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மகாராஷ்டிராவிலிருந்து 2.31 லட்சம், 676 காப்பீட்டு கோரிக்கைகள் வந்துள்ளன. சராசரியாக 1.21 லட்சம் ரூபாய்க்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு காப்பீட்டு நிறுவனங்கள் சராசரியாக ரூ .80,304 செலுத்தியுள்ளன.

ஒரு நபருக்கான காப்பீட்டுத் தொகை அளவு (Insurance Claim settlement)

நோயாளி வாரியான சராசரி கோரிக்கையில் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. இங்கே ஒரு நபருக்கான உரிமைகோரல் 2.34 லட்சமாகும். இதில் சராசரியாக காப்பீட்டு நிறுவனங்களால் கொடுக்கப்பட்டுள்ள தொகை 1.31 லட்சம் ரூபாயாகும். கேரளாவில் 93,008 ரூபாய் என்ற மிகக் குறைந்த கிளெய்ம் அளவுகள் உள்ளன. கேரளாவில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் சராசரி தொகை ரூ .54,709 ஆகும்.

இதுவரை, காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த கோரல்களில் 74% கோரல்களுக்கான தொகையை வழங்கியுள்ளன. மொத்தம் 4,200 கோடி கோரிக்கையில், 1300 கோடி மகாராஷ்டிராவில் (Maharashtra) செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த 6.10 லட்ச வழக்குகளில், இதுவரை 4.54 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

ALSO READ: Corona Vaccine-க்கான முழு செலவையும் மோடி அரசாங்கமே ஏற்கவுள்ளதா

காப்பீட்டு நிறுவனங்களின் Covid Claim தொடர்பான புள்ளிவிவரங்கள்-

பெறப்பட்ட மொத்த கிளெய்ம்கள் - 610411

மொத்த கிளெய்ம் தொகை - 9,19,78,30,8383 ரூபாய்

தொகை செலுத்தப்பட்ட க்ளெய்ம்கள் - 4,54,362 வழக்குகள்

அளிக்கப்பட்ட கிளெய்ம்களின் மொத்த தொகை - ரூ .42,43,154,100

சராசரி கிளெய்ம் தொகை - ரூ .1,50,683

செலுத்தப்பட்ட சராசரி கிளெய்ம் தொகை - ரூ .93,501

மொத்த கிளெய்ம் தீர்வு - 74 சதவீதம்

காப்பீட்டின் சராசரி கிளெய்ம் - ஒரு கிளெய்முக்கு ரூ .1.50 லட்சம்

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்றின் அளவு அதிகரிக்கின்றது. பண்டிகைக் காலங்களைத் தொடர்ந்து பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்றின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,66,705 ஐ எட்டியுள்ளது. வைரஸின் தினசரி அளவு தொடர்ச்சியாக 19 வது நாளில் 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

ALSO READ: ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் COVID Vaccine: திட்டத்துடன் தயாராகிறது அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News