Corona தடுப்பூசியால் மரணம் நிகழாது, அச்சம் வேண்டாம்: AIIMS இயக்குநர் Randeep Guleria

ஜனவரி 16 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில், நேரடி ஒளிபரப்பில் எய்ம்ஸ் தலைவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 08:01 PM IST
  • பக்கவிளைவுகளால் யாருக்கும் மரணம் ஏற்படாது என்று AIIMS இயக்குநர் ரன்தீப் குலேரியா உறுதியளித்தார்.
  • கடந்த இரண்டு நாட்களில் 2,24,311 பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
  • மொத்தம் 447 பேருக்கு பாதகமான பக்க விளைவுகள் பதிவாகியுள்ளன.
Corona தடுப்பூசியால் மரணம் நிகழாது, அச்சம் வேண்டாம்: AIIMS இயக்குநர் Randeep Guleria title=

AIIMS இயக்குநர் ரன்தீப் குலேரியா திங்களன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறித்த அச்சத்தைத் தணித்து, பக்கவிளைவுகளால் யாருக்கும் மரணம் ஏற்படாது என்று உறுதியளித்தார்.

எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா AIIMS-ல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மூன்றாவது நபராவார்.

நாடு தழுவிய கோவிட் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டவர்களில் மொத்தம் 447 பேருக்கு பாதகமான பக்க விளைவுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிறிய பக்க விளைவுகளாகவே இருந்தன. மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

"ஒரு நபர் குரோசின் அல்லது பாராசிட்டமால் எடுத்துக் கொண்டாலும் கூட, சில சமயம் அவை ஒவ்வாமை எதிர்வினைகளை உருவாக்கக்கூடும். கவலைப்பட ஒன்றுமில்லை. மரணம் ஏற்படக்கூடும் எந்தவொரு பக்க விளைவும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது.” என்று டாக்டர் குலேரியா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "உடல் வலி, காய்ச்சல், ஊசி போட்ட இடத்தில் வலி போன்ற பக்க விளைவுகள் 1-2 நாட்களில் குறைந்துவிடும். இதுவும் 10 சதவீதத்துக்கும் குறைவான மக்களில்தான் நிகழ்கின்றன. பக்க விளைவுகள் கடுமையாக இருந்தால், தோல் வெடிப்பு ஏற்படலாம், குமட்டல், சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம்." என்றார்.

COVID-19 தொற்றுநோயிலிருந்து இந்தியா வெளிபட வேண்டும் என்றால், இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றால், பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வர வேண்டும் என்றால், பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் கூறினார்.

ALSO READ: தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் சிறிய தொற்று ஒரு நல்ல அறிகுறி: AIIMS இயக்குநர்

ஜனவரி 16 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில், நேரடி ஒளிபரப்பில் எய்ம்ஸ் தலைவருக்கு தடுப்பூசி (Vaccine) வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் (Coronavirus) தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த அச்சங்களையும் சந்தேகங்களையும் நீக்கும் முயற்சியில், "எனக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை, நான் நன்றாக, நலமாக உணர்கிறேன்" என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டின் 'கோவிஷீல்ட்' தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக்கின் 'கோவாக்சின்' (Covaxin) ஆகியவை நாட்டில் முதல்கட்டமாக முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவாக்சின் பற்றிய சில சந்தேகங்கள் சிலரிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோவாக்சின் தற்போது இறுதி கட்ட மருதுவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. அவை இந்த தடுப்பூசியின் செயல்திறனை தீர்மானிக்க முக்கியமானவை.

கடந்த இரண்டு நாட்களில் 2,24,311 பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் (COVID Vaccine) போடப்பட்டுள்ளன. 2 ஆம் நாள் ஆறு மாநிலங்களில் 17,072 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டன.

ALSO READ: Corona Vaccination: இன்று எந்த மாநிலங்களுக்கு தடுப்பூசி போடப்படும்? தற்போதைய நிலை என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News