இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,691 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டின் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 2,06,58,234 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஏழு நாட்களில் மட்டும் இந்தியாவில் 26,49,808 பேர் கோவிட் நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,786 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டில் இப்போது 3 லட்சத்துக்கு மேலானோர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் நாட்டின் பொருளாதாரம் சந்திக்கும் இக்கட்டான சூழல் குறித்து இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தாஸ் உரையாற்றுவார்.
இதற்கிடையில் டெல்லியில் (Delhi) மக்கள் இறந்துகொண்டிருக்கும் நிலையில், முக்கியமில்லாத சிறிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாக தில்லி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. உயர் நீதிமன்றம், தினமும் டெல்லிக்கு 700 எம்.டி ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டும் என கட்டளையிட்டும், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எதிராக ஏன் அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படக் கூடாது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
ALSO READ: ICMR: மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு RT-PCR தேவையில்லை
மாநிலங்களைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் 51,880 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர், 891 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் 44,631 பேர், தமிழ்நாட்டில் 21,228 பேர், டெல்லியில் 18,000 பேர், கேரளாவில் 26,011 பேர், உத்தரபிரதேசத்தில் 25,858 பேர், ஆந்திராவில் 20,024 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள்: மகாராஷ்டிரா (4,822,902), கேரளா (1,664,789), கர்நாடகா (1,690,934), உத்தரபிரதேசம் (1,342,413), தமிழ்நாடு (1,228,064), மற்றும் டெல்லி (1,194,552).
உலக கொரோனா வைரஸ் புதுப்பிப்பு: கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 15,49,66,166 பேர் கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,31,65,117 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 32,40,585 பேர் இறந்துள்ளனர். 3,32,73,888 என்ற மொத்த தொற்று எண்ணிக்கையுடன் அமெரிக்கா மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ளது. அடுத்து இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன. இருப்பினும், கடந்த ஏழு நாட்களில், இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் (2,649,808) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரேசிலில் 420,978 பேர் மற்றும் அமெரிக்காவில் 355,640 பேர் பாதிக்கப்பட்டனர்.
ALSO READ: Covid Crisis: கொரோனாவை சமாளிக்க பயிற்சி மருத்துவர்களும் பணியில் ஈடுபடலாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR