கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் சிகிச்சை பலனின்றி காலமானார்..!
கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அகமது பட்டேல் (Ahmed Patel) காலமானார். ஹரியானாவில் குறுகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அகமது பட்டேலின் உயிர்ப்பிரிந்தது. குஜராத்தில் இருந்து தேர்வான மாநிலங்களவை எம்.பி.அகமது பட்டேல் தனது 71 வது வயதில் காலமானார்.
இது குறித்து அஹ்மத் படேலின் மகன் பைசல் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது... "எனது தந்தை அகமது படேல் இன்று (25/11/2020) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார் என்று அறிவிக்க வருத்தப்படுகிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு கோவிட் -19 (COVID19) நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் உறுப்பு செயலிழந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது என்று எனது தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பைசல் படேல், அனைத்து நலம் விரும்பிகளும் கோவிட் -19 விதிகளைப் பின்பற்றவும், சமூக இடைவெளிகளை எல்லா நேரங்களிலும் பராமரிக்கவும் கேட்டுக்கொண்டார்.
@ahmedpatel pic.twitter.com/7bboZbQ2A6
— Faisal Patel (@mfaisalpatel) November 24, 2020
71 வயதான அகமது படேல் அக்டோபர் 1 ஆம் தேதி தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களை சுயமாக தனிமைப்படுத்துமாறு கோரியுள்ளார். மேலும், சிகிச்சைக்காக நவம்பர் 15 ஆம் தேதி குருகிராமின் மெடந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். ராஜ்யசபா எம்.பி.யும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளருமான படேல் எட்டு முறை எம்.பி.யாகவும் காங்கிரஸ் தற்காலிக கட்சித் தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார்.
ALSO READ | நிதீஷ்குமார் முதல்வரான பின் விரலை வெட்டி காணிக்கையாக்கிய தொண்டர்..!!!
மூத்த காங்கிரஸ்காரரும் அசாமின் முன்னாள் முதல்வருமான தருண் கோகோய் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு படேலின் மரணம் ஏற்பட்டது. தற்செயலாக, ஆகஸ்ட் மாதம் 84 வயதான கோகோய் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார். கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அகமதி படேல் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அகமது படேல் மறைவுக்கு பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகமது படேல் அவர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு அப்போது நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராகவும் விளங்கினார். அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.