CWC கூட்டத்தில் மோடியின் சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முடிவு!!

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் குஜராத்தில் இன்று கூடுகிறது!

Last Updated : Mar 12, 2019, 09:04 AM IST
CWC கூட்டத்தில் மோடியின் சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முடிவு!! title=

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் குஜராத்தில் இன்று கூடுகிறது!

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் பணிகளை துவக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது சூறாவளி பிரசாரத்தை துவக்கியுள்ளார். இதையடுத்து, மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் குஜராத்தில் இன்று கூடுகிறது.

காந்தி நகரில் கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தவிர பிரியங்கா முதன்முறையாக காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வியூகம், பரப்புரை குறித்த திட்டம் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன.

தொடர்ந்து அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 1961 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் குஜராத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending News