புனே: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சில் உள்ளார். பிரச்சாரத்தின் போதும் இடையில் கிடைக்கும் சில நேரத்தை இளைஞர்களுடன், வயதானவர்களுடன் கழிப்பதில் தவறுவதில்லை ராகுல் காந்தி. குறிப்பாக ராகுல் காந்தி மாணவ-மாணவிகளுடன் பேசுவதற்க்கான வாய்ப்பு ஏற்ப்படுத்திக்கொள்கிறார்.
அதேவரிசையில் இன்று(வெள்ளிக்கிழமை) ராகுல் காந்தி புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் 5,000 மாணவர்களுடன் கலந்துரையாற்றினார். அப்பொழுது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உட்பட பல விசியங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் கேட்ட சில வேடிக்கையான கேள்விகளுக்கு பதிலளித்தார் ராகுல்.
அப்பொழுது ஒரு மாணவர் நரேந்திர மோடிக் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் பிரதமர் நரேந்திர மோடியை நேசிப்பவன், உண்மையாக நான் அவரை நேசிக்கிறேன். அவருக்கு எதிராக எனக்கு கோபமில்லை, ஆனால் அவர் என் மீது கோபம் கொள்கிறார்" என்று பதில் அளித்தார்.
மற்றொரு மாணவர், சமீபத்தில் கேரள மாநிலமான வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, கேரளா மாநிலத்தின் சில உணவுகளை சாப்பிட முயற்சி செய்தீர்களா? எனக்கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும் ராகுல் சிரித்தார்.
அதற்க்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "கேரளாவின் உணவு எனக்கு பிடிக்கும். தென்னிந்திய உணவுகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். விரும்பி சாப்புடுவேன். ஆனால் சில நேரங்களில் தென்னிந்திய உணவில் அதிக காரம் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்றார்.