ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, ஜனவரி மாதம், வைரஸ் சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் "காய்ச்சல் காரணமாக" மார்பு மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகர் அருப் பாசு மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையின் கீழ் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது” என்று சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருமதி காந்தி கண்காணிப்பில் இருப்பதாகவும், தேவையான பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது."சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சோனியா காந்தி
சமீபத்தில் ராய்பூரில் நடந்த காங்கிரஸின் 85வது கூட்டத்தில் கலந்து கொண்டார் திருமதி சோனியா காந்தி. இந்நிகழ்ச்சியில், திருமதி காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைக் குறிப்பிட்டு, "பாரத் ஜோடோ யாத்ராவுடன் தனது இன்னிங்ஸ் முடியும்" என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆண்டுக்குழு கூட்டத்தின் முதல் நாளில், கட்சியின் உயர்மட்டக் குழுவான காரியக் கமிட்டிக்குத் தேர்தலை நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் வழிநடத்தல் குழு முடிவு செய்து, புதிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதன் உறுப்பினர்களை நியமிக்க அதிகாரம் அளித்தது.
தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, பல ஆண்டுகளாக கட்சியின் உட்பூசல்கள், கோஷ்டி மோதல்கள், மற்றும் தலைவர்களின் வெளியேற்றம் ஆகியவற்றிற்குப் பிறகு, சோனியா காந்தி அக்டோபரில் 137 ஆண்டுகள் பழமையான கட்சியின் கட்டுப்பாட்டை கட்சியின் விசுவாசியான திரு கார்கேவிடம் ஒப்படைத்தார்.
கட்சியின் முதல் குடும்பமாகக் கருதப்படும் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் மீது முழு செல்வாக்கு உள்ளது.
மேலும் படிக்க | கேரள சிபிஐஎம் அமைச்சர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் ஸ்வப்னா சுரேஷ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ