மத்திய அரசின் சோலார் மின் திட்டம் (Rooftop Solar Scheme): புதிய நாடாளுமன்றத்தில் நேற்று மதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது இடைக்கால பட்ஜெட் என்பதால் அளவில் அறிவிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், சோலார் திட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
நேற்று பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட சோலார் மின் திட்ட அறிவிப்பில், வீட்டின் மேற்கூறையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் மேல் கூரைகளில் சோலார் அளவுகளை நிறுவுவதன் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். முன்னதாக, அயோத்தியாவில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), வீட்டில் சோனா சூர்யா சக்தி அலகுகளை அமைக்கும் நோக்குடன் பிரதம மந்திரி சூரிய உதய யோஜனா தொடங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ.18000 சேமிக்கலாம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலவச சோலார் மின் திட்டத்தை பற்றி குறிப்பிடுகையில், சூரிய சக்தியின் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தை விநியோக நிறுவனங்களுக்கு விற்றால் ஆண்டுக்கு ரூபாய் 18000 வரை சேமிக்கலாம் என்றார். மிச்சமாகும் இந்த மின்சாரம் எலக்ட்ரிக் வாகனங்களை ரீசார்ஜ் செய்வதற்கும் உதவியாக இருக்கும் என்றார். பொதுவாக வீட்டின் மேற்கூறையில் சோலார் எனப்படும் சூரிய சக்தி அலகு இருந்தால், 100 யூனிட் மின்சாரம் கூட தேவைப்படாது என்கின்றனர் நிபுணர்கள். இருந்தாலும் அரசின் இந்த திட்டம் மூலம் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்! எப்படி தெரியுமா?
வீட்டின் மேற்கூரையில் சூரிய எரிசக்தி பெற சோலார் அலகு அமைப்பதற்கான வழிமுறைகள்
வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் சோலார் அமைக்கலாம். இதற்கு சோலார் அமைப்பதற்கான சதுர அடியை பொறுத்து 50 ஆயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதன் மூலம் வீட்டின் பெரும்பாலான மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை மற்றும் பனி காலங்களில் மட்டுமே மின்சார சப்ளை சிறிது தேவைப்படும்.
அரசின் மானியத்தை பெறுவதற்கான வழிமுறை
நீங்கள் வீட்டின் மேற்குறையில் சோறா அமைத்துள்ளது அரசிடம் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் சோலார் மின் சக்தி மூலம் கிடைக்கும் எரி சக்தியை தவிர, 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்தலாம்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிற முக்கிய அறிவிப்புகள்
1. கர்ப்ப புற்றுநோயை தடுக்கும் நோக்கில், ஒன்பது முதல் 14 வயது உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஊசி போடப்படும்
2. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்
3. விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் ஆயிரம் விமானங்கள் புதிதாக வாங்கப்படும்.
4. சுமார் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும். மெட்ரோ சேவைகளும் விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! IRCTC வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ