சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதால் பாலியல் புகார்: தலைமை நீதிபதி

அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக தான் என் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2019, 12:09 PM IST
சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதால் பாலியல் புகார்: தலைமை நீதிபதி title=

டெல்லி: கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கு அந்த பெண் கடிதம் எழுதியுள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கன் அமர்வு முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை வந்தது. அப்பொழுது பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியது, என் மீது பாலியல் புகார் அளித்த பெண் வெறும் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார். என் மீது நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு, உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வெறும் 10 மணி நேரம் கொடுத்தார்கள். இதுபோன்ற புகார்களுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என கருதினேன்.

20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றி உள்ளேன். அதற்கான அங்கீகாரம் தான் இந்த புகாரை என கருதுகிறேன். எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன். நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் தற்போது நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News