New Parliament Building Sengol: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்துவைக்கிறார். நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரசுத் தலைவரே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடியால் திறக்கப்படுவது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதல் எனவும் பல எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
20 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
இந்த குற்றச்சாட்டை அடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவுக்கு 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பிரமதர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதை கண்டிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் சார்பில் அறிக்கையும் விடப்பட்டன. அதில்,"ஜனாதிபதி முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு நமது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரும் அவமானம் மட்டுமன்றி அதன் மீதான நேரடியான தாக்குதலும் ஆகும்.
'அரசியலமைப்பு உணர்வை மீறும் செயல்'
இந்த கண்ணியமற்ற செயல் குடியரசுத் தலைவரின் உயர் பதவியை அவமதித்து, அரசியலமைப்பின் வார்த்தையையும், உணர்வையும் மீறுவதாகும். தேசம் தனது முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவரைக் கொண்டாடும் பரந்துப்பட்ட உணர்வை, இந்நிகழ்வு குறைந்து மதிப்பிடுவதாக உள்ளது" என தெரிவித்தனர்.
மேலும், எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை, புறக்கணிப்பது,'நமது மாபெரும் தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் மீதான அப்பட்டமான அவமதிப்பு' என பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மக்களைவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே 'சோழ செங்கோல்' நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
'சோழ செங்கோல்'
அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்றத்தற்கு சாட்சியாக இருக்கும் வகையில், ராஜாஜியின் ஏற்பாட்டில் திருவாடுத்துறை ஆதினம் சார்பில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் நேருவிடம் அந்த செங்கோல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 100 சவரன் தங்கத்தில் 5 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்த செங்கோல், 'சோழ செங்கோல்' என அழைக்கப்பட்டாலும், இது சோழர் காலத்துடையது இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் தமிழ்நாட்டில் அவரது அரசியல் தேவைக்காக செங்கோலைப் பயன்படுத்துகின்றனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். "இது இவர்களின் (பாஜக) வழக்கம்தான். இது அதன் திரிக்கப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை அலங்காரம் செய்து வடிவமைக்கிறது.
எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை
மதராஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மத ஸ்தாபனத்தால் (திருவாடுத்துறை ஆதினம்) உருவாக்கப்பட்ட மற்றும் மெட்ராஸ் நகரில் (தற்போது சென்னை) வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் உண்மையில் ஆகஸ்ட் 1947இல் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது.
மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் நேரு ஆகியோர் இந்த செங்கோலை இந்தியாவிற்கு பிரிட்டிஷ் அதிகாரத்தை மாற்றியமைத்ததற்கான அடையாளமாக விவரித்ததற்கு எந்த ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை. இந்த விளைவுக்கான அனைத்து கூற்றுகளும் எளிமையானவை, அனைத்தும் பொய்தான் ஒரு சிலரின் கற்பனையில் முழுமையாகவும், முழுமையாகவும் தயாரிக்கப்பட்டு, வாட்ஸ்அப்பில் பரவி, இப்போது ஊடகங்களின் மூலம் பரவி வருகிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதற்கு, பாஜகவின் சார்பிலும் பதிலடிகள் வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் காங்கிரஸின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Why does the Congress party hate Indian traditions and culture so much? A sacred Sengol was given to Pandit Nehru by a holy Saivite Mutt from Tamil Nadu to symbolize India’s freedom but it was banished to a museum as a ‘walking stick’.
— Amit Shah (@AmitShah) May 26, 2023
ஆதீன வரலாறு போலியா?
"காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் வெறுக்கிறது? இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் நேருவுக்கு புனிதமான செங்கோல் தமிழ்நாட்டின் ஒரு புனிதமான சைவ மடத்தால் வழங்கப்பட்டது, ஆனால் அதை ஒரு 'வாக்கிங் ஸ்டிக்' ஆக காங்கிரஸால் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது," என்று அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
Now, Congress has heaped another shameful insult. The Thiruvaduthurai Adheenam, a holy Saivite Mutt, itself spoke about the importance of the Sengol at the time of India’s freedom. Congress is calling the Adheenam’s history as BOGUS! Congress needs to reflect on their behaviour.
— Amit Shah (@AmitShah) May 26, 2023
மேலும் மற்றொரு ட்வீட்டில்,"இப்போது மற்றொரு வெட்கக்கேடான அவமானத்தை காங்கிரஸ் குவித்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம், ஒரு புனித சைவ மடம். இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி அந்த ஆதீனம் குறிப்பிட்டுள்ளது. ஆதீனத்தின் வரலாற்றை போலி என்கிறது காங்கிரஸ்! அவர்களின் சுய நடத்தை குறித்து காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்" என குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மன்னராட்சி கட்சிகள்
அதேபோல் ஜே.பி. நட்டா கூறுகையில்,"புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகள் மன்னராட்சி போல் நடத்தப்படும் கட்சிகள். அவர்களின் மன்னராட்சி முறைகள் நமது அரசியலமைப்பில் உள்ள குடியரசு மற்றும் ஜனநாயகம் கொள்கைகளுடன் முரண்படுகின்றன" என எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து, அடுக்கடுக்கான ட்வீட்களை பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வை அவமதிப்பது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதிப்பதாக இருக்கும் ஜே.பி. நட்டா கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ