மே.வங்க முதல்வராக 2-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார்

Last Updated : May 27, 2016, 01:43 PM IST
மே.வங்க முதல்வராக 2-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார் title=

மேற்கு வங்கத்திலுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அதில் ஆளும் திரிணாமுல் கட்சி மொத்த 294 தொகுதிகளில் 211 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது.

2-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள மம்தாவுக்கும், மற்ற 41 அமைச்சர்களும்  மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ்,  பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் கேஜ்ரிவா, லாலு பிரசாத், பரூக் அப்துல்லா மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

அருண் ஜேட்லி மற்றும் பூட்டான் பிரதமர்:

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ , தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ்:

லாலு பிரசாத் யாதவ் மற்றும் பரூக் அப்துல்லா:

 

Trending News