நக்ஸலைட் நல்லவர்கள் தான்; ஆனால் அவர்களது வேலைகள் நல்லதல்ல: பிரதமர் மோடி

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் மாவோயிஸ்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவது ஏன்? என பிரதமர் மோடி கேள்வி எழுபியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2018, 04:01 PM IST
நக்ஸலைட் நல்லவர்கள் தான்; ஆனால் அவர்களது வேலைகள் நல்லதல்ல: பிரதமர் மோடி title=

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பலத்தை தேர்தல் பிரசாரத்தில் காட்டி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி நக்சல் பாதிக்கப்பட்ட  பஸ்தார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டார்.

அப்பொழுது அங்கு நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி பேசிய சிறப்பம்சங்கள்:

- சத்தீஸ்கர் மாநிலத்தை வளமையாக மாற்ற வேண்டும் என அடல்பீகாரி வாஜ்பாயின் கனவாகும். அந்த கனவை நிறைவேற்றவே மீண்டும் மீண்டும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகை தருகிறேன். அவரின் கனவை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

- தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 18 வயது ஆகிறது. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தேவைகளும் மாறுபடும். இதற்குப் பிறகு, பெற்றோர்கள் குழந்தைகளின் தேவைகளுக்கேற்ப அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள்.

- இதற்கு முன்பு இங்கிருந்த முந்தைய அரசுகள் எண்ணங்கள் என்னுடையவை என்றே இருந்தது. என்னுடைய சாதி, என் குடும்பம், என் உறவினர் என்றே இருந்தது. ஆனால் நாம் இந்த சூழ்நிலைகளை மாற்றியுள்ளோம், நமது மந்திரம் "அனைவருக்கும் ஒன்று இணைவோம் - அனைவரும் வளர்ச்சி பெறுவோம்".

- நகரப்புறங்களில் வாழும் மாவோயிஸ்டுகள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் நல்ல பள்ளிகளிலும் வெளிநாடுகளில் படிக்கின்றனர். ஆனால் கிராமபுறங்களில் உள்ள பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகளாக மாற்றி அவர்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நகரங்களில் இருந்தபடி இயக்கி வருகிறார்கள்.

- சொகுசு வாழ்க்கை வாழும் மாவோயிஸ்டுகள் காங்கிரஸ் கட்சி ஏன் ஆதரிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

- பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் மாவோயிஸ்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது.

- பஸ்தர் மாவடத்தில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து, மாநிலத்தை வளமையாக மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் எனக் கூறினார்.

 

Trending News