மாநில பாடத்திட்டத்தை நீட் தேர்வில் சேர்க்க மத்திய அரசு முடிவு!

மருத்துவ மாணவ சேர்க்கைக்காக நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தினையும் சேர்த்து கேள்வித்தாள்களைத் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்து வருகிறது.

Last Updated : Jan 18, 2018, 02:28 PM IST
மாநில பாடத்திட்டத்தை நீட் தேர்வில் சேர்க்க மத்திய அரசு முடிவு! title=

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்ந்து கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில் மத்திய அரசின் ஒரு முடிவு எடுத்துள்ளது.

சென்ற ஆண்டு வரை நீட் தேர்வு கேள்வித்தாளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் மட்டுமே வினாத்தாள்கள் தயாரித்தனர். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இதற்கு முற்று புள்ளிவைக்கும் வகையில், இந்த ஆண்டில் இருந்து மாநிலப் பாடத் திட்டங்களையும் நீட் தேர்வில் சேர்ப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதை பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இன்று நடைபெற உள்ள நீட் சிறப்பு கூட்டத்தில் மாநில பாடத் திட்டங்களையும் இணைத்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நிறைவேறினால், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு சவாலாக இருக்காது என்றும், அனைத்து மாநில மாணவர்களுக்கும் நீட் தேர்வு சமமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களை ஒன்றாக இணைத்து கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Trending News