டெல்லி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் 13.67% குறைவு

Last Updated : Jun 4, 2017, 02:30 PM IST
டெல்லி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் 13.67% குறைவு title=

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர். 

டெல்லியில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 13.67% குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 91.06% இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டில் 78.09% ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 13.67% குறைந்துள்ளது.

தலைநகரின் தேர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக நிலையாக குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டு 98.40% இருந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 91.06% குறைந்து, தற்போது 78.09% இறக்கம் கண்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.

Trending News