விரைவில் இந்தியாவில் இ-பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சர்வதேச வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளின் கீழ் இந்திய அரசாங்கம் இந்தச் சேவையைத் தொடங்கப் போகிறது. இ-பாஸ்போர்ட் போலி பாஸ்போர்ட்டுகளை நிறுத்துவது மட்டுமல்லாமல், உலக அளவில் குடியேற்ற செயல்முறையை எளிதாக்கும். ஆனால் இந்த இ-பாஸ்போர்ட் என்றால் என்ன, எப்படி செயல்படும் என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. எனவே இ-பாஸ்போர்ட் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்
மத்திய பட்ஜெட்டில் இ-பாஸ்போர்ட் தொடர்பான அறிவிப்பில், 2022-23 ஆம் ஆண்டில் இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னதாக, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யாவும் குடிமக்களுக்கு இந்திய அரசு விரைவில் இ-பாஸ்போர்ட் வசதியை கொண்டு வர உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த பாஸ்போர்ட்டுகள் பயோமெட்ரிக் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் (E-Passport) என்பது சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே இருக்கும், ஆனால் டிரைவிங் லைசென்ஸில் உள்ளதைப் போன்ற "சிப்" இ- பாஸ்போர்ட்டில் இருக்கும். இந்த சிப்பில், பயணிகளின் முழுமையான தகவல்கலுடன் பயோமெட்ரிக் தரவுகளும் இருக்கும். பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற தகவல்கள் இந்த மைக்ரோசிப்பில் சேமிக்கப்படும். இந்த சிப் மூலம் இமிகிரேஷன் கவுன்டரில் பயணிகளின் சரிபார்ப்பு பணி விரைவாக நடப்பதோடு, போலி பாஸ்போர்ட் பிரச்சனை ஒழியும் என்பது சிறப்பு. அதேபோல இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சரிபார்ப்பு நேரம் சுமார் 50 சதவீதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகள் இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குகின்றன
இ-பாஸ்போர்ட் யோசனை புதியதல்ல. ஏற்கெனவே அதிகாரிகள் மட்டத்தில் ராஜீய துறையில், இ பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முதன் முதலாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 2008ஆம் ஆண்டு பயோமெட்ரிக் தகவல்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்தில் இத்தகைய பாஸ்போட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நாடுகளில் பயோமெட்ரிக் இ-பாஸ்போர்ட் அமைப்பு உள்ளது. இந்த பாஸ்போர்ட்டில் 64KB சேமிப்பு இடம் உள்ளது, அதில் பயனர் விவரங்கள் சேமிக்கப்படும். இந்தியாவில் இ-பாஸ்போர்ட்கள் மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள செக்யூரிட்டி பிரஸ்ஸில் தயாரிக்கப்படும்.
விண்ணப்ப நடைமுறையில் ஏதேனும் மாற்றம் வருமா?
இ-பாஸ்போர்ட்டுக்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. அதன் விண்ணப்பத்தின் செயல்முறை மாறாது என்பதோடு விண்ணப்ப படிவத்திலும் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியாவில் உள்ள அனைத்து 36 பாஸ்போர்ட் அலுவலகங்களும் இ-பாஸ்போர்ட்களை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்திய அரசால் இ-பாஸ்போர்ட் பரிசோதனை முறையில் வழங்கப்படுகிறது.
ALSO READ | Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR