கர்நாடகா பாஜக தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தலித் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு உயர்தர ஓட்டலில் இருந்து இட்லி வாங்கி வரப்பட்டு உணவருந்தியுள்ளார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் துமாகூர் மாவட்டத்தில் தலித் ஒருவர் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டார் எடியூரப்பா. அப்பொழுது உயர்தர ஓட்டலில் இருந்து இட்லி வாங்கி வந்து அவருக்கு பரிமாறப்பட்டது. இச்சம்வத்தால் எடியூரப்பா தீண்டாமையைக் கடைப்பிடித்ததாகக் கூறி காவல் நிலையத்தில் எடியூரப்பா மற்றும் பா.ஜனதாவினருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டு உள்ளது.
பா.ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஓட்டலில் இருந்து உணவு வாங்கிவரப்பட்டதை ஒப்புக் கொண்டார். ஆனால் இட்லி, வடை மட்டுமே ஓட்டலில் இருந்து வாங்கிவரப்பட்டது. மற்றபடி தலித் பிரிவினர் வீட்டில் செயப்பட்டு இருந்த உணவையும் அவர் சாப்பிட்டார் என கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் எனவும் கூறினார்.
காங்கிரஸ் தரப்பில் கூறியதாவது:- எடியூரப்பா தலித் வீட்டில் சாப்பிடவில்லை. ஹோட்டல் உணவையே சாப்பிட்டார் எனவும், தலித் பிரிவினர் மேம்பாட்டிற்கு உண்மையாகவே உழைப்பவர்கள் என்றால் அதற்கான கொள்கையுடன் வரவேண்டும். காங்கிரஸ் கட்சியே தலித்தின் உண்மையான தோழன் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்வம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரலாகி வருவது.