புதுடெல்லி: லடாக்கில் ஏற்பட்டு வரும் வன்முறை காரணத்தால், அண்டை நாட்டிற்கு எதிராக கோபம் அதிகரித்துள்ளதால், சீன உணவை சாப்பிடுவதை நிறுத்துமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்தியா (India) தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
READ | தெரிந்து கொள்வோம் : உங்கள் TikTok கணக்கை முழுமையாக நீக்குவது எப்படி...
இதற்கிடையில் மேட்-இன்-சீனா தயாரிப்புகளை புறக்கணிப்பதைத் தவிர, சீனாவை காயப்படுத்த குடிமக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்று, அவர்களின் உணவை சாப்பிடுவதை நிறுத்துமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஓட்டல்களில் சீன உணவு வகைகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.