2020 ஆம் ஆண்டில் ஹாலோவீன் ப்ளூ மூன்:
ப்ளூ மூன் (Blue Moon) என்பது ஒரு அரிதான விஷயமாகும். அதுவும் இந்த ஆண்டு இதன் வினோதம் இன்னும் அதிகமாகி விட்டது. 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்கமுடியாத ஆண்டாக மாறி வருகிறது. ப்ளூ மூனுக்கும் அது விதிவிலக்கல்ல.
ஹாலோவீன் (Halloween) என்பது மெற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். சாத்தான்களை விரட்டும் நாளாகவும், வெயில் காலம் முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் ஒன்று கூடி வெவ்வேறு முறைகளில் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இதன் தாக்கம் அவ்வளவாக இல்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக இங்கும் சிலர் இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஹாலோவீனுடன் ப்ளூ மூன் இணைந்து வருகிறது.
ஆம்!! இந்த ஆண்டு ஹாலோவீன் இரவில் வானத்தில் ஒரு நீல நிலவு காணப்படும். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரும் முழு நிலவு நீல நிலவு அதாவது ப்ளூ மூன் எனப்படுகிறது.
ALSO READ: Blue Moon on October 31: இந்த சந்திரனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
கடைசியாக ஹாலோவீனில் ப்ளூ மூன் வந்தது 1944 ஆம் ஆண்டில். நாசாவின் படி அடுத்த ஹாலோவீன் ப்ளூ மூன் 2039 இல் நிகழும்! ஒவ்வொரு ஆண்டும் ஹாலோவீன் வருகிறது. ஆனால் இந்த ஆண்டு அது நிச்சயமாக 'Once in a blue moon Halloween’- ஆக இருக்கும்.
இந்த நாளில் காணப்படும் நிலவை (Moon) நீல நிலவு என நாம் அழைத்தாலும், உண்மையில் நிலவு நீலமாகக் காணப்படுவதில்லை.
இயற்கை பேரழிவுகளால் வளிமண்டலத்தில் வீசப்படும் துகள்கள் காரணமாக நிலவு மிகவும் அரிதாகவே நீல நிறமாகத் தெரிகிறது என்று நாசா கூறுகிறது.
ஹாலோவீன் இரவில் நீல நிலவு செவ்வாய் கிரகத்தின் அருகே தோன்றும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், வானம் தெளிவாகவும், மாசு அளவு குறைவாகவும் இருந்தால் அதை நீங்கள் காணலாம்.
ப்ளூ மூன் ஒவ்வொரு 19 வருடங்களுக்கும் ஏழு முறை தோன்றுகிறது. 2020 உண்மையில் ஸ்கை வாட்சர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு மூன்று சூப்பர் நிலவுகள், நான்கு சந்திர கிரகணங்கள் மற்றும் ஒரு புளூ மூன் உட்பட 13 முழு நிலவு நிகழ்வுகள் இருந்தன. மூன்று சூப்பர் நிலவுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்பட்டன.
இந்தியாவில் ப்ளூ மூனை எப்படி எப்போது காண்பது:
அக்டோபர் 31 அன்று இந்தியாவில் இரவு சுமார் 8:19 மணிக்கு ப்ளூ மூனைக் காணலாம் என வானியல் நுபுணர்கள் கூறியுள்ளார்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR