பாஜக பெண்கள் கூட்டு வன்புணர்வு தகவல் உண்மையில்லை: போலீஸ் சமாளிப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஆளும் அரசின் மீது பாஜகவினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 12:54 PM IST
பாஜக பெண்கள் கூட்டு வன்புணர்வு தகவல் உண்மையில்லை: போலீஸ் சமாளிப்பு! title=

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை அடுத்து அம்மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஆளும் அரசின் மீது பாஜகவினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேற்கு வங்க (West Bengal) தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, வன்முறை பற்றிய தகவல்கள் அங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றன. வன்முறை அறிக்கைகளுக்கு இடையே, பல வீடியோக்கள் மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன. காரில் கிடந்த ஒரு பெண்ணின் படம் இதில் அடங்கும். TMC செயற்பாட்டாளர்களால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் பாஜகவைச் சேர்ந்தவர் (BJP) என்றும் கூறப்படுகிறது. பாஜகவின் பல பெரிய தலைவர்களும் இந்த வன்முறை செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த விஷயத்தில் ஒரு புதிய திருப்பம் வந்துள்ளது. செவ்வாயன்று, டி.எம்.சி தலைவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுடன் வெளியே வந்தனர். இதுபோன்ற எதுவும் தனக்கு நடக்கவில்லை என்று அந்தப் பெண்மணி ஒப்புக்கொண்டுள்ளார்.

ALSO READ | TMC தொண்டர்களால் பற்றி எரியும் வங்காளம்; குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா

இது தொடர்பாக திங்கள்கிழமை (மே 3), மேற்கு வங்க பாஜக கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "பிரம்பம் மாவட்டம் நானூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் தாரக் சஹாவின் வாக்குப்பதிவு முகவர்களான இரண்டு பெண் ஆர்வலர்களை டிஎம்சி கட்சியை சேர்ந்த ஆண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் ஒரு பெண் கடத்தப்பட்டுள்ளார்." என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைகளுக்கு எதிராக பாஜக தலைவர் கௌரவ் பாட்டியாவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில், தற்போது மேற்கு வங்க காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” பீர்பம் பகுதியில் பாஜக தேர்தல் பெண் முகவர்கள் இருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பகிரப்பட்ட ஸ்க்ரீன்ஷார்டை போலியானது என பதிவிட்டு இருக்கிறது.

 

 

பாலியல் வன்புணர்வு அல்லது கூட்டு வன்புணர்வு போன்ற சம்பவங்கள் ஏதும் மாவட்டத்தில் எங்கும் நிகழவில்லை. இந்த செய்தியை உருவாக்கியவர்கள், பரப்பியவர்கள் யார் என்பதை கண்டறிந்து வழக்கு பதிவு செய்ய உள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி தெரிவித்து உள்ளார். 

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன் ட்விட்டர் பக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் பாஜக பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக தலை மூடப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். ஆனால், இப்புகைப்படம் குறித்த தகவல் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செய்திகளிலும் வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக மேற்கு வங்க கலவரம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பதிவுகளை கங்கனா பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார். ட்விட்டர் விதிமுறையை மீறியதாக கங்கனாவின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டது. எனினும், அவர் முகநூலில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News