பாஜகவின் 12 மணி நேர பந்த்; காவி கட்சி தொண்டர்களுக்கு நீதி தேவை...

மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாஜக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Last Updated : Jun 10, 2019, 10:37 AM IST
பாஜகவின் 12 மணி நேர பந்த்; காவி கட்சி தொண்டர்களுக்கு நீதி தேவை... title=

மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாஜக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் போது மேற்குவங்கத்தில், பா.ஜ.க - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கடும் மோதல், பல முறை வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான முன்விரோதத்தால் 4 பேர் கொல்லப்பட்டதால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னரும் மேற்குவங்கத்தில் வன்முறை தொடர்வது கவலை அளிப்பதாகவும், இதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுக்கு, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்குவங்க தலைமைச் செயலாளர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, மேற்குவங்கத்தில் கருப்பு நாளாக அனுசரித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.

 

Trending News