பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, வரும் 2019-ஆம் ஆண்டு பொதுதேர்தலில் பாஜக அமேக வெற்றி பெறும், மேலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என தெரிவித்துள்ளார்!
பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நேற்று தொடங்கியது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இரண்டாம் நாள் கூட்டமான இன்று நிகழ்ச்சியில் பேசிக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவிக்கையில்... வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமேக வெற்றிப் பெறும். மேலும் அடுத்த 50 ஆண்டிற்கு பாஜக-வின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இதனை நாங்கள் பெருமைக்காக சொல்லவில்லை, எங்கள் ஆட்சி செய்துவரும் நலப்பணிகளுக்காக மக்கள் அளிக்கும் பரிசாக வரவிருக்கும் தேர்தல் வெற்றியினை கருதுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து தெரிவிக்கையில்.. பிரதமர் மோடி அவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்களை பெருமை படுத்தும் விதமாக ‘அஜய் பாரத், அடல் பாஜக’ என்னும் முழக்கத்தினை வரும் தேர்தல் பிரச்சாரத்திற்காக அறிவித்துள்ளார். இந்த முழக்கத்தினை முன்னாள் பிரதமரை பெருமை படுத்தவே அவர் அளித்துள்ளதாக நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள்... பிஹாரில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள மஹகத்பந்தன் ஆனது ஒரு கண்துடைப்பு கூட்டணிதான். மக்கள் இக்கூட்டணியை நம்புவதற்கு தயாராக இல்லை. பாஜக-வினை தனித்து எதிர்க்க முடியாக மக்களால் உருவாக்கப்பட்டதே இந்த மஹகத்பந்தன், இதுவே பாஜக-விற்கான வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பிரதமர் மோடி போல் எதிர்கட்சியில் திறமையான தலைவர்கள் இல்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!