'கோட்சே ஒரு தேசியவாதி' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக MLA!

பாஜகவின் மற்றொரு உறுப்பினர் காந்தியை கொன்ற கோட்சேவை தேசியவாதி என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : May 30, 2019, 11:06 AM IST
'கோட்சே ஒரு தேசியவாதி' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக MLA! title=

பாஜகவின் மற்றொரு உறுப்பினர் காந்தியை கொன்ற கோட்சேவை தேசியவாதி என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

மத்தியப் பிரதேச மாநிலம் டாக்டர். அம்பேத்கர் நகர் பாஜக எம்.எல்.ஏவான உஷா தாகூர் பேசிய போது, தனது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தேசத்தை பற்றி அக்கறை கொண்ட நபராக கோட்சே திகழ்ந்தார் என்று தெரிவித்தார். மேலும் எந்த சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்திருப்பார் என்று கோட்சேவுக்கு மட்டுமே தெரியும் என்று கூறிய உஷா அதுகுறித்து நாம் யாரும் கருத்து சொல்ல முடியாது எனவும், அவர் ஒரு தேசியவாதி என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் மத்தியபிரதேசத்தின் பாஜக ஒழுங்குக்குழு உறுப்பினர் பாபுசிங் ரகுவான்ஷி பேசிய போது ஊடகங்கள் கோட்சே தொடர்பாக கேள்விகளை தொடர்ந்து பாஜக தலைவர்களிடம் கேட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த சூழ்நிலையில் அந்த கேள்விகளை கேட்பது பொருத்தமற்றது எனவும், இதன்மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பிரக்யா தாகூர், உஷா தாக்கூர் இருவரும் பாஜகவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, இந்த கருத்துக்கள் பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவதாக தெரிவித்தார். மேலும் விஷம கருத்துக்களை கூறிய இரு தலைவர்களும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, தற்போது பாஜக மக்களவை உறுப்பினராக உள்ள பிரக்யா நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்ததை தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News