புதுடெல்லி: ஜார்க்கண்ட் (Jharkhand) சட்டமன்றத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) - காங்கிரஸ் (Congress) - ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கூட்டணி தெளிவான பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பாஜகவுக்கு 33.53 சதவீத வாக்குகளும், ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடிக்கு 36 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி முறையே 19.29 சதவீதம், 13.78 சதவீதம், 2.82 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. தேர்தல் போராட்டத்தில், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் 15,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வின் முதலமைச்சர் வேட்பாளர் ரகுபர் தாஸ் தோல்வியை தழுவினார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டபேரவையில் (Jharkhand Election Results 2019) காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்களில் பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜார்கண்ட் தேர்தலில், ரகுபார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியை கிட்டத்தட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். ரகுபர் தாஸின் கோட்டையாக கருதப்படும், அவர் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் 1995 முதல் அந்த தொகுதியில் ஒரு தேர்தலிலும் தோல்வியடையவில்லை. ஆனால் தற்போது அவரது அமைச்சரவையில் பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த சாரியு ராய்வுக்கு மேலிடம் சீட் வழங்காததால், கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக, பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் ரகுபர் தாசை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் (Jharkhand Assembly Eelection) 5 கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி நடத்தப்பட்டது. 17 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு கடந்த திங்கக்கிழமை (டிசம்பர் 16) நடந்து முடிந்தது. இறுதியாக 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20 ஆம் தேடி நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.