அமெரிக்க தேர்தலை நினைவுபடுத்தும் பீகார் தேர்தல்; நீடிக்கும் இழுபறி.. வேகம் எடுக்கும் மெகாகூட்டணி

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் பிற்பகல் வரை பின்தங்கி இருந்த மெகாகூட்டணி மீண்டும் மாலையில் தனது வெற்றி வேகத்தை அதிகரித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 06:48 PM IST
அமெரிக்க தேர்தலை நினைவுபடுத்தும் பீகார் தேர்தல்; நீடிக்கும் இழுபறி.. வேகம் எடுக்கும் மெகாகூட்டணி title=

புதுடில்லி: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் எதிர்க்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் பிற்பகல் வரை பின்தங்கி இருந்த மெகாகூட்டணி மீண்டும் மாலையில் தனது வெற்றி வேகத்தை அதிகரித்துள்ளது. அதாவது என்.டி.ஏ 121 மற்றும் ஆர்.ஜே.டி தலைமையிலான மெகாகோட்டணி 113 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும் கட்சி எதுவென்று பார்த்தால், பாஜகவுக்கும், ஆர்ஜேடிக்கும் இடையே போட்டி இருக்கிறது. அதாவது 71 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது, ஆர்ஜேடி 74 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, இந்த நேரத்தில் தேஜஷ்வி யாதவின் கட்சி ஆர்.ஜே.டி மிகப்பெரிய கட்சியாக உருவாகி வருகிறது.

71 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது மற்றும் ஒரு இடத்தை வென்றுள்ளது. அதன் கூட்டணியாக ஜே.டி.யு 42 இடங்களில் முன்னிலை வகித்து ஒரு இடத்தை வென்றுள்ளது. வாக்குகளின் எண்ணிக்கையில், ஹம் பார்ட்டி மூன்று இடங்களிலும், VIP கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மெகா அலையன்ஸின் 74 இடங்களில் ஆர்.ஜே.டி முன்னிலை வகிக்கிறது மற்றும் ஒரு இடத்தை வென்றுள்ளது. காங்கிரஸ் 21 இடங்களிலும், சிபிஐ -3 இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிச) 12 இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.

ALSO READ | சூடு பிடிக்கும் பீகார் வாக்கு எண்ணிக்கை: பரபரப்பு இரு பக்கம், வெற்றி யார் பக்கம்?

பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அசாதுதீன் ஒவைசியின் கட்சி  AIMIM நன்கு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 3 இடங்களில் சுயேச்சைகள் முன்னணியில் உள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்து தேர்தலில் போட்டியிட்ட சிராக் பாஸ்வானின் கணக்கு இன்னும் திறக்கப்படவில்லை. தேர்தலில் ஜே.டி.யு வேட்பாளருக்கு எதிராக எல்.ஜே.பி தனது வேட்பாளரை நிறுத்தியது.

பாஜக மற்றும் ஜேடியு கூட்டணி இதுவரை 35.43 சதவீத வாக்குகளையும், ஆர்ஜேடி-காங்கிரஸ் கிராண்ட் அலையன்ஸ் 32.13 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

இருப்பினும், கோவிட் -19 காரணமாக இந்த முறை வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் வாக்குகளின் எண்ணிக்கை நீடிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News