இது ராகுல் காந்தி 2.0... மோடி மண்ணில் இருந்து மாஸ் கம்பேக் - முழு விவரம்

Bharat Joda Yatra 2.0: பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டம் குஜராத் விரைவில் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 8, 2023, 09:53 PM IST
  • இரண்டாம் கட்டம் குஜராத்தில் இருந்து மேகாலயா வரை நடைபெறும்.
  • முதல் கட்டம் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது.
  • நடைபயணம் நிறைவடைய 130 நாட்களுக்கு மேல் ஆனது.
இது ராகுல் காந்தி 2.0... மோடி மண்ணில் இருந்து மாஸ் கம்பேக் - முழு விவரம் title=

Bharat Joda Yatra 2.0: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டம் குஜராத்தில் தொடங்கி வடகிழக்கு மாநிலமான மேகாலயா வரை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இங்கு செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸின் தலைவரான நானா படோலே, இந்த கூற்றை உறுதிப்படுத்தியதுடன், மாநிலத்தில் கட்சி நிர்வாகிகள் இணையான அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். "ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டம் குஜராத்தில் இருந்து மேகாலயா வரை நடைபெறும்" என்று படோல் கூறினார். மாநிலத்தின் பல இடங்களில், முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அணிவகுப்பு நடத்த உள்ளனர்.

"மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் பூமி" என்று வர்ணித்த மேற்கு மாநிலமான குஜராத்தில் இருந்து தனது 'பாரத் ஜோடோ யாத்ரா'வின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை அழைத்ததாக குஜராத் காங்கிரஸ் நேற்று (ஆக. 7) அறிவித்தது. குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், "எங்கள் மாநிலத்தில் நடைபயணத்தின் இரண்டாம் கட்டம் தொடங்க வேண்டும். 

பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை திட்டமிட, தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், அங்கிருந்து இரண்டாம் கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்குமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார். 

மேலும் படிக்க | 200 ரூபாயுடன் மும்பை சென்ற தமிழர்.... தோசை விற்று கோடீஸ்வரர் ஆன சாதனை கதை!

ராகுல் காந்தி மீண்டும் நேற்று மக்களவை உறுப்பினராக பதவியேற்றதை அடுத்து சாவ்தா பாராட்டினார், மேலும் கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானியுடன் ஆளும் கட்சியின் உறவை அவர் கொண்டு வந்ததால் காந்தியின் குரலை அடக்க பாஜக முயற்சித்ததாகக் கூறினார். சாவ்தாவின் கூற்றுப்படி, ராகுல் காந்தியின் கர்ஜனை மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் கேட்கும் என்றார். 

முன்னதாக, சூரத் நீதிமன்றத்தில் இருந்து மோடி குடும்பப்பெயர் பற்றிய அறிக்கை தொடர்பான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பின்னர், கேரளாவின் வயநாடு மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மார்ச் 24ஆம் தேதி அன்று மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைப்பதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் மக்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றார். நேற்று வெளியிடப்பட்ட மக்களவை செயலகத்தின் அறிக்கையின்படி, அவரது தகுதி நீக்கம் நீக்கப்பட்டது மற்றும் அவரது உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்ட சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர்கள் தூரம் நடந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் முதல் கட்ட நடைபயணம் முடிவடைந்தது. முதல் கட்ட பாரத் ஜோடோ யாத்திரை, 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,970 கிலோமீட்டர்கள் பயணித்தது. நடைபயணம் நிறைவடைய 130 நாட்களுக்கு மேல் ஆனது. இருப்பினும், புதிய பாதையின் பிரத்யேகங்கள் மற்றும் தொடர்புடைய தேதிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க | முதலில் தக்காளி அடுத்து காதலி... புது கார் வாங்கி கலக்கும் விவசாயி!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News