TTD: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

கோயிலின் நிர்வாகம் ஆந்திராவின் திருமலை-திருப்பதியில் உள்ள  ஏழுமையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2021, 06:34 PM IST
  • யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜம்மு ஏழுமலையான் கோயிலின் உள்கட்டமைப்பு இருக்கும்.
  • அர்ச்சகர்கள் குடியிருப்பு, பக்தர்கள் தங்குவதற்கான வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கட்டப்பட உள்ளன
  • உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவர்களும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்
TTD: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது title=

ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேத பாட சாலை, அர்ச்சகர்கள் குடியிருப்பு, பக்தர்கள் தங்குவதற்கான வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கட்டப்பட உள்ளன.

கோயிலின் நிர்வாகம் ஆந்திராவின் திருமலை-திருப்பதியில் உள்ள  ஏழுமையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இருக்கும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) ஜம்முவில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷென் ரெட்டி மற்றும் ஜிதேந்திர சிங், மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் TTD அறக்கட்டளை வாரியத் தலைவர் Y.V. சுப்பா ரெட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பிற வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பல உள்ளூர் அரசியல் தலைவர்கள், சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

ALSO READ | புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் (Jammu and Kashmir) ஏழுமலையான கோயில் அமைவதால், அந்த பகுதியில் சுற்றுலா மேம்படுவதோடு, பொருளாதாரமும் மேம்படும் என அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாதா வைஷ்ணோ தேவி ஆலயம் மற்றும் அமர்நாத் குகைக் கோயில் போல், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜம்மு ஏழுமலையான் கோயிலின் உள்கட்டமைப்பு இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, "ஜம்மு கோயில்களின் நகரம், நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி பாலாஜி கோயில் அமைவது மிகவும் சிறப்பு" என்றார்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட கோயிலுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மக்களுக்கு பயனளிக்கும்  என்பதோடு பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று ரெய்னா கூறினார்.

ALSO READ | Women Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News