எய்ம்ஸில் மூக்கு வழி செலுத்தும் BBV154 கொரோனா தடுப்பு மருந்தின் 2/3ம் கட்ட பரிசோதனை

பாரத் பயோடெக்கின் மூக்கில் வழியாக செலுத்தப்படும் கோவிட் -19 தடுப்பூசியின் 2/3 வது கட்ட  மருத்துவ பரிசோதனைகளை டெல்லி எய்ம்ஸ் விரைவில் தொடங்க உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2021, 11:17 AM IST
எய்ம்ஸில் மூக்கு வழி செலுத்தும் BBV154 கொரோனா தடுப்பு மருந்தின் 2/3ம் கட்ட பரிசோதனை title=

புதுடெல்லி: ஐதராபாத்தை தளமாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தப்படும்  BBV154 தடுப்பூசியின் 2வது மற்றும் 3 வது கட்ட பரிசோதனைகள்,  தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS), விரைவில் தொடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் -19  பரவலை தடுக்க நாசி வழியாக செலுத்தப்படும் ஸ்ப்ரே வகை தடுப்பூசியை தயாரிக்க பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், பாரத் பயோடெக்கின் (Bharat BioTech) மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட சோதனைகளுக்கு ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது. 

நாட்டின் முதன்மையான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமான எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓரிரு வாரங்களுக்குள் சோதனைகள் தொடங்கும் என்றும் இதற்கான அனுமதியை பெற எய்ம்ஸ் நெறிமுறைக் குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத் பயோடெக்கின் நாசி வழி தடுப்பூசி மருத்துவ பரிசோதனையின், முதன்மை ஆய்வாளர் டாக்டர் சஞ்சய் ராய் ஆவார். நெறிமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இரண்டாம் கட்ட பரிசோதனைகளில், தன்னார்வ அடிப்படையில்,  பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு, நான்கு வார இடைவெளியில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்படும்.

ALSO READ | COVID Vaccine: 6 மாதங்களுக்கு ஒரு முறை போட்டுக்கொள்ள வேண்டுமா? WHO கூறுவது என்ன?

 

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியான BBV154, இந்தியாவில் மனித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்த வகை முதல் COVID-19 தடுப்பூசி ஆகும். உடல் ஆரோக்கியமாக உள்ள 18-60 வயதிற்குள் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனை முடிவுகள்  சிறந்த வகையில் இருந்தாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது. 

இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிந்தபின் மூன்றாம் கட்ட பரிதனைகள் தொடங்கும். எய்ம்ஸ் டெல்லியில் 2 முதல் 18 வயது வரை உள்ளவருகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு,  அதற்கான மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ALSO READ | COVID-19 Update: இன்று 1,587 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 18 பேர் உயிரிழப்பு

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News