அயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: ஜனவரி 10ம் நாள் விசாரணை -உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை மீண்டும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2019, 01:16 PM IST
அயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: ஜனவரி 10ம் நாள் விசாரணை -உச்சநீதிமன்றம் அறிவிப்பு title=

கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 3 பிரிவினரம் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற வந்த இந்த வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மீண்டும் இந்த வழக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனக்கூறி, வழக்கை மீண்டும் இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இன்று சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட உள்ளது. எனவே இந்த வழக்கு வரும் ஜனவரி 10 ஆம் நாள் விசாரிக்கப்படும் எனக் கூறி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தது.

Trending News