அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த விசாரணையை நடத்த நேரமில்லை என்று உச்ச நீதிமன்ற கூறியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியிடம் தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில் மேல்முறையீடு மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி கேஹர் தலைமை அமர்வுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சுவாமிக்கு பதில் அளித்த நீதிபதி கேஹர் கூறியது. “கருத்தொற்றுமை ரீதியிலான தீர்வுக்கு நீங்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நடுநிலையாளர் ஒருவரை தேர்வு செய்துகொள்ளுங்கள், நான் வேண்டுமானாலும் உதவு செய்ய தயார்” எனக்கூறினார்
மேலும் அயோத்தி வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணையை நடத்த தற்போது எங்களுக்கு நேரமில்லை என்று சுப்பிரமணியன் சுவாமியிடம் நீதிபதி தெரிவித்தனர். விசாரணைக்கு தேதி எதையும் குறிப்பிட மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.