Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?

Election In 2022: இந்த ஆண்டு இறுதியில் ஏழு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், தேர்தல் செலவு மிச்சம் என மத்திய அரசு எண்ணுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 26, 2022, 06:21 PM IST
  • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக அரசு தீவிரமாகச் சிந்தித்து வருகிறது.
  • மீண்டும் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டியதில்லை. செலவும் மிச்சம்.
  • தேர்தல் காரணமாக ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்? title=

Assembly Election 2022: இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டல்ல, ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவது உறுதி. இது தவிர கர்நாடகா, மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடத்த மத்திய, மாநில அரசும், தேர்தல் ஆணையமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஒருவேளை ஏழு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், கர்நாடகா, மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு முன்கூட்டியே தேர்தல் வரும். இவற்றில், மூன்று மாநில அரசுகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு, அதாவது மார்ச் 2023 லும், கர்நாடகாவின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் 2023 மே மாதமும் நிறைவடைகிறது. அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் 2019 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. அங்கு சட்டசபைத் தேர்தலும் நிலுவையில் உள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.

அதாவது இந்த வருடம் இறுதியில் இரண்டு மாநிலங்களுக்கும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு மாநிலங்களுக்கும், பிற்பகுதியில் இரண்டு மாநிலங்கள், இறுதியில் ஐந்து மாநிலங்கள் என தனித்தனியாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இப்படி அடிக்கடி தேர்தல் நடத்தப்பட்டால், செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் காரணமாக ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வெவ்வேறு தேர்தல்களால், இந்த செலவு இன்னும் அதிகரிக்கிறது. இந்த செலவினத்தை படிப்படியாக குறைக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.

மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி

இந்த ஆண்டு இந்த ஏழு மாநிலங்களிலும் தேர்தல் நடந்தால், அடுத்த ஆண்டு அதாவது 2023ல் ஐந்து மாநிலங்களில் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். அதுவும் சேர்ந்து ஒன்றாக சட்டசபைத் தேர்தலை முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் மீண்டும் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டியதில்லை. செலவும் மிச்சம் என எண்ணுகிறது.

அதாவது இந்த ஆண்டு இறுதியில் ஆட்சி பதவிக்காலம் முடியும் மாநிலங்களையும், அடுத்த ஆண்டு 2023ல் தொடக்கம் மற்றும் பிற்பகுதியில் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களையும் சேர்த்து ஒன்றாக 2023 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தினால், ஒரே ஒரு முறை மட்டும் தேர்தல் நடத்த வேண்டும். பின்னர் 2024 ஆம் ஆண்டிலும், இதே ஃபார்முலாவை பயன்படுத்தி லோக்சபா தேர்தலுடன் மீதமுள்ள ஏழு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலையும் மத்திய அரசு நடத்தலாம்.

மத்திய அரசின் திட்டம் நடக்கவில்லை என்றால், 2023க்குள் நாட்டில் நான்கு தேர்தல்கள் நடக்கும். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் இந்த ஆண்டின் இறுதியில், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா 2023 தொடக்கத்தில், இதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும், 2023 இறுதிக்குள் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க: ராஜ்யசபா எம்.பி ஆனார் இளையராஜா - மத்திய அரசு கொடுத்த பரிசு

மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. மத்திய அரசின் முன்மொழிவின் பேரில் ஆளுநர் சட்டசபையை கலைத்தால், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்புள்ளது. தற்போது, ​​தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி உள்ளது அல்லது பா.ஜ., அரசின் ஒரு அங்கமாக உள்ளது. உதாரணமாக, கர்நாடகா மற்றும் திரிபுராவில் பாஜக ஆட்சி உள்ளது. அதே நேரத்தில், மேகாலயா, நாகாலாந்தில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எனவே, பா.ஜ., தன் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை சமாதானப்படுத்தினால், இந்த மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக அரசு தீவிரமாகச் சிந்தித்து வருகிறது. ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து முடிவெடுத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சி வெற்றி பெறலாம். 

மேலும் படிக்க: 2 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் ராஜினாமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News