சட்டசபை தேர்தல் 2017: கோவா- 83%, பஞ்சாப்- 70%

பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Last Updated : Feb 5, 2017, 09:51 AM IST
சட்டசபை தேர்தல் 2017: கோவா- 83%, பஞ்சாப்- 70% title=

சண்டிகார் / பனாஜி: பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பஞ்சாப், கோவா ஆகிய 2 மாநிலங்களில் நேற்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் 117 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சி 112 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

117 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,145 பேர் போட்டியிடுகின்றனர். ஓட்டு பதிவுக்காக மாநிலம் முழுவதும் 22615 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்காளர் எண்ணிக்கை சுமார் 2 கோடி ஆகும்.

வாக்கு பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதல், அவருடைய மனைவியும், மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் ஆகியோரும் காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்தனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஜலந்தர் நகரில் தனது தாயார் அவ்தார் கவுருடன் வந்து ஓட்டுப் பதிவு செய்தார். காங்கிரசை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, மனைவி நவ்ஜோத் கவுருடன் வந்து வாக்களித்தார்.

நேற்று மாலை ஓட்டுப் பதிவு முடிவடைந்தபோது 75 சதவீத வாக்குகள் பதிவானது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநில சட்டசபைக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா ஆகியவை தனித் தனி அணிகளாக போட்டியிட்டனர். மொத்தம் 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவுக்காக 1,642 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

1110000 வாக்காளர்களை கொண்ட கோவா மாநிலத்திலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

பா.ஜ.க., முதல்-மந்திரி வேட்பாளராக கருதப்படும் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், கோவா முதல்-மந்திரி லட்சுமிகாந்த் பர்சேகர் ஆகியோர் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஓட்டு பதிவு செய்தனர்.

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தபோது 83 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது.

இந்த 2 மாநிலங்களிலும் அடுத்த மாதம் 11-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 

Trending News