நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் 'வேலை நிறுத்தம்': பண பரிவர்த்தனை முடக்கம்

மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2018, 07:09 AM IST
நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் 'வேலை நிறுத்தம்': பண பரிவர்த்தனை முடக்கம் title=

மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..... 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொதுத்துறை வங்கிகளான 'பாங்க் ஆப் பரோடா'வுடன் விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைப்பதற்கான திட்டத்தை வெளியிட்டனர். இந்த திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவும், அனுமதி அளித்துள்ளது. SBI வங்கி இணைப்புக்கு பின், இரண்டாவதாக, இந்த மூன்று வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவால், வங்கிகளின் வராக் கடனை மீட்பதில் பிரச்னை ஏற்படும்; ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக்கூறி, வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கிகள் இணைப்பை எதிர்த்து, இன்று நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதனால் வங்கிகள் செயல்படவில்லை. இந்த நிலையில் இன்று 9 தொழிற் சங்கங்களின் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதாவது, நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 80,000 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். சுமார் 5 சதவீதம் அதிகாரிகள் மட்டும்  போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் குதிப்பதால் இன்று நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

குறிப்பாக DD எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வங்கிகள் திறந்திருந்தாலும் ஊழியர்கள் இல்லாததால் எந்த பணிகளும் நடைபெறாது. அதே நேரத்தில் ATM சேவையும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம். போராட்டத்தால் வங்கிகளுடன் இணைந்த ATM-களின் சேவையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல பிற பகுதிகளில் உள்ள ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

 

Trending News