அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

Last Updated : Jul 16, 2017, 04:16 PM IST
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி title=

அமர்நாத்துக்கு யாத்திரை சென்ற பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியாயினர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

கடந்த 10-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 7 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த பஸ் , பகல்ஹாம் அருகே ஒரு இடத்தில் பள்ளத்தாக்கில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16 பேர் பலியாயினர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். சம்பவ இடத்தில் பக்தர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

 

 

Trending News